Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

08:30 AM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

“ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்” என திராவிட முன்னேற்ற கழகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் பெயர்களில் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 

இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ் நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்”… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
திமுக முப்பெரும் விழாபவள விழாDMKMK StalinMupperum Vizha
Advertisement
Next Article