Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!

12:11 PM Dec 10, 2023 IST | Web Editor
Advertisement

தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளது.

Advertisement

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படியுங்கள் : குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!

‘மிக்ஜாம்’ புயல் மற்றும் தொடர் மழையால் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் புயலால் சேதமடைந்த பள்ளி, கல்லூரிகளை சீரமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளன. மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
AnnouncementChennaiEducationDepartmentReOpenSchoolsTOMORROW
Advertisement
Next Article