20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்!
சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர் கலெத் பிண் தலால் அல் சவூத்தின் மகன்தான் இளவரசர் அல்வாலீத் பின் கலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ். இவர், சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல்அஜீசின் கொள்ளு பேரனாவார். கடந்த 2005-ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்த இளவரசர் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதனால் , மூளையில் படுகாயம் அடைந்த இளவரசர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் அவர் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 36. கோமாவில் இருந்த அவருக்கு இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இளவரசரிடம் சில நேரங்களில் அசைவுகள் இருந்து வந்ததால் அவர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் கலெத் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார். இளவரசரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்றும், பக்ரியா மாவட்டத்தில் உள்ள அரண்மனையில் உடல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
மேலும் 22-ந்தேதி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.