Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சவுதி பேருந்து விபத்து – தவெக தலைவர் விஜய் இரங்கல்

சவுதி அரேபியாவில் இந்தியர்கள் பலர் உயிரிழந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
07:27 PM Nov 17, 2025 IST | Web Editor
சவுதி அரேபியாவில் இந்தியர்கள் பலர் உயிரிழந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement

சவுதி அரேபியாவின் மெக்காவில் இருந்து மதீனாவிற்கு பேருந்து ஒன்றில் உம்ரா பயணிகள் பலர் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்ற பேருந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சேர்ந்தவர்கள் ஆவர். இச்சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இந்தியர்கள் உயிரிழந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
BusAccidentcondolencelatestNewsmadhinamekkaSaudiArabiatvkvijay
Advertisement
Next Article