Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது சசிகுமாரின் #Freedom க்ளிம்ஸ் வீடியோ!

12:59 PM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபிரீடம்’ படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார். ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபிரீடம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தற்போது வெளியாகி உள்ளது.

குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால், அப்போது தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

Tags :
FreedomGlimpseLijomol JosesasikumarSathyaSiva
Advertisement
Next Article