Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா!

01:04 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

Advertisement

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வி.கே. சசிகலா இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.  அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டார். சாமி தரிசனத்திற்காக நேற்று திருப்பதி மலைக்கு வந்த சசிகலா இரவு வராஹ சாமியை வழிபட்டார்.  தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

இதையடுத்து அவர் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள்,
வேத ஆசி ஆகியவற்றைப் பெற்று கொண்டார்.  அதன் பின் கோயிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோயில் எதிரில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

Tags :
BakthiSasikalaTirupathiVenkateswara temple
Advertisement
Next Article