Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விரைவில் தொடங்குகிறது சர்தார் 2 படப்பிடிப்பு! – லேட்டஸ்ட் அப்டேட்!

11:09 AM Jan 28, 2024 IST | Web Editor
Advertisement

சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை நிகழ்ச்சி பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.  இத்திரைப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.  இதனால், படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்த இரண்டாம் பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார் இதில் கார்த்தி, ராஷி கண்ணா நடிக்கின்றனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இதையடுத்து, சமீபத்தில் இப்பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி.எஸ்.மித்ரன் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதன் திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதால் இதில் மற்ற மொழி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பை 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
#cinemaupdates#VijaySethupathyKarthiNews7Tamilnews7TamilUpdatesPSMithransardarSardar2
Advertisement
Next Article