Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சரத் குமார் நடித்த”தி ஸ்மைல் மேன்” OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

08:27 PM Jan 21, 2025 IST | Web Editor
Advertisement

சரத் குமார் நடித்த “தி ஸ்மைல் மேன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு  வெளியான பொன்னியன் செல்வன்,போர் தொழில்,பரம் பொருள் உள்ளிட்ட படங்கள் மக்களிடயே நல்ல வறவேற்பை பெற்றது. இந்நிலையில் ஷ்யாம் பிரவின் இயக்கத்தில் இவரது 150 வது சிறப்பு திரைப்படமாக ”தி ஸ்மைல்மேன் மேன்” திரைப்படம் உருவாகின.

இந்த படத்தில் சரத்குமார், அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.அவரது ஞாபகங்கள் அழிவதற்குள் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படத்தை இயக்கியிருந்தனர்.

இப்படம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி வெளியாகி மக்களிடயே நல்ல வரவெற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலிஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 

Tags :
ActorSarathKumarahamovieNews7Tamilnews7TamilUpdatesthe smile man
Advertisement
Next Article