Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி "தமிழ் ரத்னா" விருது வழங்கி கவுரவித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு "பாரத் ரத்னா" விருது!

03:30 PM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங்,  பி.வி.நரசிம்மராவ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் வேளாண் விஞ்ஞானிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தமிழ் ரத்னா விருது வழங்கி கவுரவித்திருந்தது. 

Advertisement

ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன்

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்பிற்காக,  நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.  இந்த விருதை அவரது குடும்பத்தினரிடம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்

  • பி.வி. நரசிம்ம ராவ், ஜூன் 28, 1921 அன்று ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக் கழகம். பாம்பே பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 
  • வேளாண் நிபுணரும், வழக்கறிஞருமான இவர், ஆந்திராவில் 1962 முதல் 1964 வரை சட்டம் மற்றும் தகவல் அமைச்சராகப் பணியாற்றினார். அதேபோல், சட்டம் மற்றும் அறக்கட்டளைகள் அமைச்சராக 1964-67 வரையும், சுகாதார மற்றும் மருத்துவ அமைச்சராக 1967-ம் ஆண்டு பணியாற்றினார்.
  • 1971 முதல் 1973 வரை ஆந்திர பிரதேச முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், 1971-73 ம் ஆண்டுகளில் அனைத்திந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச்செயலராக இருந்தார். 1957 முதல் 1977 வரை ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், 1977 முதல் 1984 வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய  போது 1980 முதல் 1984 வரை வெறியுறவு அமைச்சராகப் பணியாற்றினார்.  ஜூலை 19, 1984 முதல் டிசம்பர் 31, 1984 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • மேலும், டிசம்பர் 31, 1984 முதல் செப்டம்பர் 25, 1985 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின் செப்டம்பர் 25, 1985 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • நரசிம்ம ராவ் 1991 - 1996 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தார்.  நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸில் இருந்து பிரதமராக வந்தவர்களில் இவர் முதலிடத்தில் உள்ளார்.  இவர் பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தது.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் வழங்கிய பங்களிப்புகள் மகத்தானவை.
  • இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை செழுமைப்படுத்திய ஒரு தலைவராக நரசிம்ம ராவ் திகழ்ந்தார்.
  • இவர் வெளியுறவு, பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை போன்ற முக்கிய இலாகாக்களையும் கைவசம் வைத்திருந்தார். இவர் 2004ல் மறைந்தார்.

முன்னாள் பிரதமர் சரண்சிங்

 

Tags :
bharat ratnaChaudhary Charan SinghFormer PMMS SwaminathanNarashima RaoNews7Tamilnews7TamilUpdatesPM Modi
Advertisement
Next Article