Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘சூர்யா44’-க்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

08:14 PM May 15, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சூர்யாவின் 44வது படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 

Advertisement

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தார். கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து இன்னும் தகவல்கள் வரவில்லை.

இதையடுத்து தற்போது சூர்யா 44 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மற்றும் சூர்யாவின் 2டி இணைந்து தயாரிக்கின்றன.இதில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும் வரும் ஜூன் முதல் வாரம் அந்தமானில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
actorKarthick Subbarajsanthosh narayananSuryaSurya44
Advertisement
Next Article