Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

''சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினம்'' - தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அஞ்சலி!

04:51 PM Nov 13, 2023 IST | Student Reporter
Advertisement

நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி
புதுச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில்    அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

நாடகத்தந்தை என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கருவடி குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் மற்றும் நாடக  கலைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் புதுச்சேரி அமைச்சர் லஷ்மிநாராயணன், எதிர்கட்சி தலைவர் சிவா, நடிகர் சங்க தலைவர் நாசர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து  தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் செய்தியாளர்களை சந்திந்தார். அவர் கூறியதாவது..

''நாடக குழுவில் இருந்தவர்கள் தான் இன்று வரைக்கும் சினிமாவின்  மிக சிறந்த ஆளுமைகளாக இருக்கின்றனர். அந்த வகையில் சங்கரதாஸ் சுவாமிகள் விட்டுச்சென்ற பணிகளையும் அவர் எழுதிய நாடகங்களும் மேடையேற்ற பட வேண்டும். இந்த வருடம் அவருடைய படைப்புகளை கொண்டு நாடக விழா நடத்தப்படும்''  என  நடிகர் நாசர் தெரிவித்தார்.

 

Tags :
LashmiNarayannasarNEWS 7 TAMILNews 7 Tamil Updatespuducheri ministersSankaradas Swamy's 101st Death AnniversarySHIVAsouth indian actors association
Advertisement
Next Article