Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக #SanjivKhanna நியமனம்!

09:57 PM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9-ஆம் தேதி முதல் டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பெயரை டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : திருச்சியில் 2 கி.மீ நீளத்தில் புறவழிச்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை! போக்குவரத்து நெரிசலை தடுக்க #TNGovt -ன் அசத்தல் திட்டம்!

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நவ.11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் 2025 ஆண்டு மே 13ம் தேதி நிறைவடையும். எந்தவொரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChiefJusticeDYChandrachudNews7Tamilnews7TamilUpdatesSanjivKhannaSupremeCourt
Advertisement
Next Article