'மக்களின் மனிதன்' கும்மாடி நர்சய்யா பயோபிக்கில் சமுத்திரக்கனி!
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கும்மாடி நர்சய்யா என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் நரசய்யாவாக சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநராக இருந்து நடிகரானவர் சமுத்திரக்கனி. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நல்ல நடிகராக அறியப்பட்டவர் சாட்டை, அப்பா போன்ற படங்கள் மூலம் மேலும் பிரபலமடைந்தார். தற்போது, தெலுங்குப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் பவண் கல்யாணை வைத்து 'புரோ' என்கிற பெயரில் ரீமேக் செய்தார். அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கும்மாடி நர்சய்யா என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் நரசய்யாவாக சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகப்படியான வெள்ள நீர் புகுந்ததால் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது – சிபிசிஎல் விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கும்மாடி நர்சய்யா, எல்லண்டு தொகுதியில் 5 முறை சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நர்சய்யாவுக்கு சொந்த வீடு கிடையாது. எம்எல்ஏவான பின்பும் பெரும்பாலும் மிதிவண்டியையே (சைக்கிள்) பயன்படுத்தியிருக்கிறார்.
சக மக்களுடன் பேருந்துகளில் பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்பவரான நர்சய்யாவை 'மக்களின் மனிதன்' என்றே அழைக்கின்றனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.