Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் | விரைந்து தீர்வு காண முதலமைச்சர் #MKStalin அறிவுறுத்தல்!

04:32 PM Oct 05, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காண அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன், டி.ஆர்.பி. ராஜா, ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் அமைச்சர்கள் தலையிட்டு இதற்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலை தொடர்ந்து அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் நாளை மறுநாள் (அக்.7) பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Next Article