Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thailandல் தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் - ஜனவரி முதல் அமல்!

09:34 AM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

தன்பாலின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில் வருகிற ஜனவரி முதல் தாய்லாந்தில் இச்சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Advertisement

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா, சிவில் மற்றும் வணிக குறியீடுகளில் 'ஆண் மற்றும் பெண்' என்கிற வார்த்தைகளை 'தனிநபர்கள்' என்றும் 'கணவன் மற்றும் மனைவி' என்கிற வார்த்தைகளை 'மணம் புரிந்த இணையர்கள்' என்று மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!

இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் கடந்த 27.03.2024 அன்று  வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மொத்தம் உள்ள 415 உறுப்பினர்களில் 400 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இந்த தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.

இதையடுத்து, நிறைவேற்றப்பட்ட மசோதா செனட் அவைக்கும் அதன் பிறகு ராஜ்ய ஒப்புதலுக்கு மன்னருக்கும் அனுப்பப்பட்டது,  பெரும்பாலும் கீழ் சபையில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த சட்ட மசோதாவும் செனட் சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி இச்சட்டம் வருகிற ஜனவரி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிய அளவில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடுகளில் தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.

Tags :
Constitutional Approvalsame sex marriage
Advertisement
Next Article