Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பண்டிகை கால தள்ளுபடி காரணமாக #vehicles மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!

08:15 PM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனங்கள் பண்டிகைகளுக்கு அளித்த தள்ளுபடி காரணமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஓணம், நவராத்திரி, தீபாவளி, தசரா பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதைத் தொடர்ந்து வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன. கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கு முன்னதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை தொடர்பான முன்பதிவு 10 சதவீதம் அதிகரித்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் முதல் நாளில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் விற்பனை அதிகரித்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் விற்பனை 15 முதல் 16 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சராசரியாக 3,30,000 வரையிலான எண்ணிக்கையில் வாகன விற்பனை நடந்துள்ளதாகவும், இது பண்டிகைக் காலங்களில் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த ஆண்டின் பண்டிகைக் காலங்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் எப்போது தமிழ்நாடு திரும்புகிறார்கள்? – #Tamilnadu அரசு அறிக்கை!

சில்லறை வணிகம், இணைய வர்த்தகம், விநியோக நிறுவனங்கள், நுகர்வோர் பொருள்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் போன்றவை ஆட்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் என தனியார் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தொழில் நிறுவனங்களில், இணைய வர்த்தகத்தின் தேவை கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
discountselectronic devicesIncreasedNews7Tamilnews7TamilUpdatessalesVehicles
Advertisement
Next Article