சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் விவகாரம் | சஸ்பெண்ட் செய்ய துணை வேந்தருக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு பணி நியமனங்கள் முதல் பொருட்கள் கொள்முதல் செய்தது வரை ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்தது. இதில், கணினி அறிவியல் துறைத்தலைவரும், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளருமான தங்கவேல் மீது தெரிவிக்கப்பட்ட 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.
ஆனால், இன்று வரை அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பதிவாளர் தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் உடனே பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் எனறு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.