Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த தடை - 2ஆண்டுகளுக்கு தடை விதித்து யுஜிசி உத்தரவு!

10:30 AM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28 துறைகள் செயல்பட்டு வருகிறது.  இங்கு கடந்த கல்வி ஆண்டுகளில் கலந்தாய்வு இல்லாமல், அந்தந்த துறைகள் மூலமாக நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளின் முதுநிலை பாடத்தில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, சமூகவியல், இதழியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர் வேதியியல், உயிர் புள்ளியியல், ஆற்றல் அறிவியல், கல்வியியல், உயிர் மருத்துவ அறிவியல், ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த 19ம் தேதி பொது கலந்தாய்வு  பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : கடும் வெப்பம் எதிரொலி – குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. 2024- 2025 மற்றும் 2025- 2026 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
distance educationonline coursesSalem Periyar University InstituteUniversity Grants Committee
Advertisement
Next Article