Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் #Platform டிக்கெட் விற்பனை ரத்து!

07:26 AM Oct 29, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கோட்டத்தில் உள்ள 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை வரும் வியாழன்கிழமையன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், நேற்று முதலே வெளியூர்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் அனைத்து இடங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக மாநகர்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயண நெரிசலை சமாளிக்க, சென்னை கோட்டத்தில் இன்று மற்றும் நாளை (அக்.29,30) என இரண்டு நாட்களுக்கு சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், மருத்துவத் தேவைகளைக் கொண்ட மூத்த குடிமக்கள் மற்றும் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennai Railway DivisionpassengersPlatform TicketsSouthern Railways
Advertisement
Next Article