Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் சலார்; 750 வாகனங்களுடன் உருவான சண்டைக்காட்சி!!

09:12 AM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

சலார் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சலார்: பார்ட் 1- சீஸ்பயர்’. ‘KGF 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படமான இதை, ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிருத்விராஜ், ஜெகபதி பாபு வில்லன்களாக நடிக்கின்றனர். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் டிச. 22ல் வெளியாக இருக்கிறது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தின் சண்டைக் காட்சிகளில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article