நாளை வெளியாகும் சலார் திரைப்படம் | ரிலீஸுக்கு முன்னரே இத்தனை கோடி வசூலா?
சலார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்னே பிரீ புக்கிங் கலெக்ஷனில் கிட்டத்தட்ட 30 கோடி அளவில் வசூலை பார்த்து விட்டது.
2015 ஆம் ஆண்டு பேன் இந்தியன் மொழிகளில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். இதற்கு முன்பும் அவர் நிறைய தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இருப்பினும் அவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது பாகுபலி திரைப்படம் தான். பாகுபலி திரைப்படம் அவருடைய வாழ்வில் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டிய திரைப்படமாக ஆகும் .
பாகுபலி தொடர்ந்து அவர் நடித்த சாகோ, ராஜேஷ் யாம் ,ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்கள் எதிர்பாராத அளவிற்கு தோல்வியை தழுவி மண்ணை கவ்வியது. அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் அளவில் அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது சலார் திரைப்படத்தின் மூலம் சீறிப்பாய இருக்கிறார் நடிகர் பிரபாஸ். கே ஜி எஃப் திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கி வரும் இத்திரைப்படத்தின் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் ,ஜெகபதிபாபு,பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பேன் இந்தியன் மொழிகளில் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் நல்ல வரவேற்பு இருந்த நிலையிலும் பலரும் இத்திரை திரைப்படம் பார்ப்பதற்கு கே ஜி எஃப் திரைப்படத்தைப் பார்க்கின்ற அதே உணர்வை தருகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்னே பிரீ புக்கிங் கலெக்ஷனில் கிட்டத்தட்ட 30 கோடி அளவில் வசூலை பார்த்து விட்டது. அந்த வகையில் கண்டிப்பாக திரையரங்குகளில் ரிலீசான பிறகு போட்ட பட்ஜெட்டில் இருந்து டபுள் மடங்கு வசூலை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.