Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாய் அபயங்கரின் 3-ஆவது பாடல் வெளியானது!

சாய் அபயங்கர் 3வது பாடல் 'சித்திரபுத்திரி' வெளியாகியுள்ளது.
01:45 PM Feb 01, 2025 IST | Web Editor
Advertisement

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு, வாரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

அதனை தொடர்ந்து 'ஆச கூட'என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், அபயங்கரின் 3-வது 'சித்திரபுத்திரி' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சூர்யா தனது X- தளத்தில் வெளியிட்டார்.

Tags :
Meenakshi ChaudharySai AbhayankarSithiraputhiri Song
Advertisement
Next Article