Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள்: லோகேஷ் ரகுராமன், யூமா வாசுகிக்கு அறிவிப்பு!

01:55 PM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு,  புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.  இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்),  சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.


தமிழ் மொழியில் "விஷ்ணு வேந்தர்" என்ற சிறுகதை தொகுப்பிற்காக *லோகேஷ் ரகுராமனுக்கு* 2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,  பெங்காலி, ஆங்கிலம்,அசாமி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கனி, மைத்திலி, மலையாளம், ராஜஸ்தானி, உருது, தெலுங்கு, உள்ளிட்ட 23 மொழிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சமஸ்கிருத மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல "யுமா வாசுகி" எழுதிய *தன்வியின் பிறந்த நாள் என்ற கதை தொகுப்பிற்காக *தமிழ் மொழிக்கான பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BAL SAHITYA PURASKAR 2024bookSahitya Akademi
Advertisement
Next Article