Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி-க்கு சாகித்ய அகாடமி விருது!

09:53 PM Mar 11, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பளார் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் மாநில வாரியாக நாவல், சிறுகதை என ஆளுமை மிக்க இலக்கிய படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகிறது. 1954ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக இந்த சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
அதில் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி என்பவர் மமாங் தய் எழுதிய the black hill என்ற நாவலை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார்.

 

மேலும், கண்ணையன் தட்சிணாமூர்த்தி பல்வேறு மொழிலிருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி, புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம், இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
KarangunramSahityaAkademiAwardsTamilTranslationTHEBLACKHILLWriterKannayanDakshinamurthy
Advertisement
Next Article