#RainUpdatesWithNews7Tamil | மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடும் மழை மற்றும் பேரிடர் காலத்தில் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடும் மழை மற்றும் பேரிடர் காலத்தில் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
1).பீடர் ட்ரிப் ஆகும்போது உதவி மின் பொறியாளர் ஒப்புதல் இல்லாமல் பீடர் ஆன் செய்யக்கூடாது.
2).பீடர் டிரிப் ஆன உடன் உடனடியாக ஊழியர்களை அனுப்பி, அந்த பீடரை முழுவதும் ரோந்து செய்து பழுதை கண்டறிந்து அதை நீக்கியபின்பு பீடரை ஆன் செய்ய வேண்டும்.
3).டிரென்சில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் மின் மூலம் அகற்ற வேண்டும். மோட்டார்
4). DC லீகேஜ் இருந்தால் துணை மின் நிலையத்திற்கு வரக்கூடிய மின்சாரத்தை உடனடியாக துண்டிப்பு செய்து, உரிய அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
5).இண்டோர் பேனல் அருகில் தண்ணீர் வந்தால் உடனடியாக துண்டிப்பு செய்ய வேண்டும்.
6).பேட்டரியை தினமும் பரிசோதிக்க வேண்டும்.
7).பேனல் ஹீட்டர் ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
8).பாதுகாப்பு விதிகளை கவனமுடன் கடைபிடிக்க வேண்டும்.
துணை மின் நிலையங்களில் வெள்ளநீர் சூழும் பட்சத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக மின்மினியோகத்தை நிறுத்தவும் மாற்று வழிகளில் மின்சாரம் விநியோகம் செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.