Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடைதிறக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
07:45 PM Feb 12, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை மாசி மாதம் பிறக்க உள்ளதால் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன்படி இன்று நடை திறக்கப்பட்டது.

Advertisement

நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் தந்திரி கண்டரர், ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் காண்பித்தார். மீண்டும் நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து நாளை அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

தொடர்ந்து 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலும் தினமும் நெய்யபிஷேகம் ,கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

17ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மாசி மாத பூஜைகளுக்கு நாளை முதலே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்படும்.

Tags :
KeralaMasi Month PujaiSabarimala Ayyapan Templespecial pooja
Advertisement