Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம் - நேற்று ஒரே நாளில் 95,000 பேர் தரிசனம்!

11:54 AM Jan 11, 2024 IST | Web Editor
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (ஜன.10) ஒருநாளில் மட்டும் 95,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம்
தேதியன்று நடை திறக்கப்பட்டது.  நடை திறக்கப்பட்டதிலிருந்து இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.  இதனால் பம்பை, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு,  பல மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.  இந்நிலையில்,  சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (ஜன.10) ஒரே நாளில் 95,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

ஜன.13-ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பிரசாத சுத்திக்கிரியைகள் நடைபெறவுள்ளன.  தொடர்ந்து ஜன.14 ஆம் தேதி உஷபூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெறவுள்ளது.   ஜன.15-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ள நிலையில் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பேர் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

மகரவிளக்கு பூஜைக்காக ஜன.15-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணியளவில் மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெறவுள்ளது.   மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னர் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இதையும் படியுங்கள்: தங்கம் விலை சரிவு! எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில் பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஜன.15-ம் தேதி மாலை 6.30 மணியளவில்  திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு சார்த்தப்படும்.  அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.

அதன் பின்னர் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.
மேலும் ஜன.15-ம் தேதியிலிருந்து ஜன.18-ம் தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊர்வலம் நடைபெறவுள்ளது.  ஜன.18-ம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.

அதனைத் தொடர்ந்து ஜன-19 ம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.  மேலும் ஜன.20-ம் தேதி மாளிகைப்புரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது.   ஜன.21-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

Tags :
BakthiMakarajyothiMakaravilakku Poojanews7 tamilNews7 Tamil UpdatesSabarimalaSpot BookingSwami Ayyappan Temple
Advertisement
Next Article