Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு!

புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
10:38 AM Sep 14, 2025 IST | Web Editor
புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

Advertisement

இதனை தொடர்ந்து 21ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனிடையே சபரிமலை, பம்பையில் வருகிற 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது. இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

இதனிடையே மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்க மத்தை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக, ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது 19, 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
#openKeralaSabarimalaSabarimala Ayyappa Templetempleopen
Advertisement
Next Article