Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார் ரஷ்ய அதிபர் புதின்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
06:29 PM Aug 18, 2025 IST | Web Editor
பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
Advertisement

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக  போர் நடைப்பெற்று வருகிறது.  நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.

Advertisement

இந்த நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்  உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே  போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு  நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை சுமார் 3  மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.  இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அதிபர் புதின் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

"எனது நண்பர் ஜனாதிபதி புடினின் தொலைபேசி அழைப்புக்கும், அலாஸ்காவில் ஜனாதிபதி டிரம்புடனான சமீபத்திய சந்திப்பு குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது, மேலும் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் நாட்களில் நமது தொடர்ச்சியான பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன்"

என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
alaskacasfirelatestNewsPMModiputinrussiaukrainwar
Advertisement
Next Article