இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்...!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
07:51 PM Dec 04, 2025 IST
|
Web Editor
Advertisement
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள பாலம் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அதிபர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
Advertisement
புதினுக்கு இந்தியா சார்பில் ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசுப்பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.
ரஷ்ய அதிபர் புதின் கடைசியாக 2021 இல் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்த பயணத்தில் இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் - ரஷ்யா பேர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து உரையாடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Article