Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் !

உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
06:59 AM Mar 14, 2025 IST | Web Editor
Advertisement

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென போர் தொடுத்தது. முதலில் ரஷியா-உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா ஆக்கிரமித்தது. இதையடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.

Advertisement

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடந்த 3 வருதுங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே 30 நாள் போர் நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது.

இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும், அதிபர் புதின் மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷியாவும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
AmericaPresidentapprovesceasefirePresident PutinRussianUkraine
Advertisement
Next Article