ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ”விவசாயிகள், மீனவர்கள் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது” என்று மறைமுக பதிலளித்தார்.
இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினை சந்தித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவல் “இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு மிகவும் சிறப்பானதாக உள்ளது” எனக் கூறனார். மேலும் அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தாண்டு இந்தியா வருகிறார் ”எனத் தெரிவித்தார். இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் ஏற்பட்ட பின் ரஷ்ய அதிபர் புதின் முதல் முறையாக இந்தியா வரவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவிகிதம் உயர்த்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் உலக அரசியலில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது