Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“உக்ரைன் நட்பு நாடுகள் மீதும் ரஷ்ய ஏவுகணை பாயும்” - அமெரிக்கா, பிரிட்டனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த அதிபர் புதின்!

12:14 PM Nov 22, 2024 IST | Web Editor
Advertisement

“எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் மீதும் ஏவுகணைகள் பாயும்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான நிலையில், இதனால் தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. இதனிடையே இந்திய பிரதமர் மோடி நினைத்தால் இப்போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

ஆனால் போர் இன்னும் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக போரிட, வடகொரிய ராணுவ வீரர்களை ரஷ்யா களமிறக்கியுள்ளது. வட கொரிய வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ சீருடைகள், ரஷ்ய ஆயுதங்கள், போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தென்கொரியாவும், உக்ரைனும் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அது உண்மையாகி உள்ளது.

இதற்குப் பதிலடியாக போரில் தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்' ஏவுகணைகளை ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது. இதையடுத்து ரஷ்யா மீது உக்ரைன் இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும் தனது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் விதமாக, பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் மீது ரஷ்யா செலுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தொலைக்காட்சி மூலம் பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின்,

“ரஷ்யாவின் புதிய ஏவுகணையை நிறுத்துவதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒளியின் வேகத்தைவிட பத்து மடக்கு அதிவேகத்தில் செல்லும். ரஷ்யாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

கடந்த நவம்பர் 21ம் தேதி அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தன. இதற்குப் பதிலடியாகவே உக்ரைன் நாட்டில் இருந்த ஒரு ஆயுதக் கிடங்கின் மீது நாங்கள் இப்போது தாக்குதல் நடத்தியிருக்கிறோம்” என்று நேரடியாக எச்சரித்தார்.

Advertisement
Next Article