Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

இந்திய மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
07:01 AM Apr 13, 2025 IST | Web Editor
Advertisement

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகின்றது.

Advertisement

ஆனால் சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது. இது தொடர்பாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

"உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை, ரஷ்யா ஏவுகணை ஒன்று தாக்கியது. இந்தியாவின் நட்பு நாடு எனக்கூறும் ரஷ்யா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிகின்றன". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக உக்ரைனுக்கான பிரிட்டன் தூதர் மார்ட்டின் ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில்,''கீவ் நகரில் உள்ள மருந்து நிறுவனத்தின் குடோனில் ரஷ்யாவின் ஆயுதம் தாக்கியது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தேவைப்படும் மருந்து அழிந்தது. உக்ரைனின் சாமானிய மக்களுக்கு எதிரான ரஷ்யாவின் பயங்கரவாதம் தொடர்கிறது" என்று கூறியுள்ளார்.

Tags :
AttackcompanyIndianmissilepharmaceuticalRussian
Advertisement
Next Article