Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல்!

ரஷ்யாவானது, உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது
11:39 AM Aug 22, 2025 IST | Web Editor
ரஷ்யாவானது, உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது
Advertisement

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக  போர் நடைப்பெற்று வருகிறது.  நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.

Advertisement

இந்த நிலையில், கடந்த் ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்  உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே  போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு  நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

தொடர்ந்து டிரம்ப் கடந்த  19 ஆம் தேதி உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவானது, உக்ரைனின் மேற்கு பகுதியில் ஒரே இரவில் சுமார் 574 ட்ரோன்கள், 40 பலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா்.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் ராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால் மறுபுறம் உக்ரைன் அதிகாரிகள் இந்த தாக்குதலால் 26 குடியிருப்புகள், ஒரு மழலையா் பள்ளி மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உகரைன் ரஷ்யா இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
droneattacklatestNewsmissilerussiaukrainwarTrumpUkrain
Advertisement
Next Article