மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் - இருளில் மூழ்கிய உக்ரைன்!
மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக் உக்ரைனின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை உள்ளூர் கிளர்ச்சிப் படையினருடன் இணைந்து கைப்பற்றியது.
கடந்த 28 மாதங்களாக ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படவும், அமைதி நிலவவும், தேவையான சமாதான நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன.
இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் இயங்காமல் போயின. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.