Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

01:55 PM Oct 31, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Advertisement

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும்,  அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும் விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீசார் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் நிலவரங்களை பொறுத்து மாவட்ட நிர்வாகம் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி, அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டுமெனவும், அணிவகுப்பு க்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு வரும் நவம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
appealHigh courtNews7Tamilnews7TamilUpdatesrallyRSSRSS RallySupreme courtTN PoliceTNGovt
Advertisement
Next Article