Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TNGovt | போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு!

10:21 AM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டியுள்ளது. இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.50.23 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.23.55 கோடி, விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.47.14 கோடி, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.29.30 கோடி, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.54.82 கோடி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.73.53 கோடி, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.53.91 கோடி, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.39.54 கோடி என மொத்தம் ரூ.372.06 கோடி தேவைப்படுகிறது.

இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறைத் தலைவர் கோரிக்கை வைத்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த அரசு ரூ.372 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்தை பங்கு மூலதன உதவியாக ஒதுக்கி ஆணையிடுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
PensionersTN GovtTransport
Advertisement
Next Article