Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
10:50 AM Aug 14, 2025 IST | Web Editor
தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சரகம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Advertisement

"தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், நாஞ்சிக்கோட்டை சரகம், மாதாக்கோட்டை நேற்று (13.08.2025) மாலை 6.00 மணியளவில் மேம்பாலம் தஞ்சாவூரிலிருந்து பனங்காடு சாயபுரம் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் கேரளாவிலிருந்து நாகூருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த இனோவா கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அறிவழகன் (வயது 37) த/பெ.பக்கிரி, பவியாஸ்ரீ (வயது 9) த/பெ.அறிவழகன் மற்றும் தேஜாஸ்ரீ (வயது 4) த/பெ.கருப்பையா ஆகிய மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உஷா (வயது 37) க/பெ.அறிவழகன் மற்றும் ரூபா (வயது 10) த/பெ.அறிவழகன் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERfamiliesfinancial assistanceM.K. StalinRoad accidentsThanjavur
Advertisement
Next Article