ஐம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் -பிரதமர் மோடி அறிவிப்பு
ஐம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நேற்று ஜம்மு பிரிவின் தோடா மாவட்டத்தில் பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. அசார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றாக இயங்கியதாகவும், ஒன்றையொன்று முந்திச் செல்லும் பந்தயத்தில் இந்த பெரும் விபத்து நடந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஐம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தோடா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர்.