Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

RRvsGT - டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு!

08:18 PM Apr 10, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) சவாய் மான்சிங் மைதானத்தில் 24 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ராஜஸ்தான் அணி முழு வீச்சுடன் களம் இரங்கியுள்ளது

அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த முறை 3 வது வெற்றியை அடைய வேண்டும் என களம் இறங்கியுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ள நிலையில், அதில் குஜராத் அணி 4 முறை வெற்றி அடைந்து இருக்கிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஷ்வாலும், ஜோஸ் பட்லரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நிதானமாக சஞ்சு சாம்சனும் ரியான் பிராங்கும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்களுடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Tags :
#SportsCricketgujarattitansnews7 tamilNews7 Tamil UpdatesrajasthanroyalsRRvsGT
Advertisement
Next Article