Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப் - சென்னை மாநகர காவல்துறையின் புதிய முயற்சி!

பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப்-பை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
09:13 PM Apr 28, 2025 IST | Web Editor
Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ரோபோடிக் போலீசை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், “சென்னை பெருநகரில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , சென்னை பெருநகர காவல் துறையினரால் ''ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்' என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்: 

* 24X7 நேரடி கண்காணிப்பு

* 360° வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்

* எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான்

* எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு

* ஜிபிஎஸ் மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு

* உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன்

* பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பு

ஆபத்தில் உள்ள நபர் அல்லது அருகிலுள்ளவர் இந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால்:

* காவல்துறைக்கு உடனடி அழைப்பு

* அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி

* வீடியோ கால் மூலம் நேரடி காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு

* ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் வருகை

* கேமரா பதிவு மூலம் புலனாய்வு மற்றும் நடவடிக்கை

சென்னையின் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள். வணிக வளாகங்கள்.  வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் இடங்களில் இது நிறுவப்பட உள்ளது. பூங்காக்கள் உள்ளிட்ட இந்த சாதனம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் உயிர் காக்கும் நம்பிக்கையான பாதுகாப்பு தோழராக செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennai policeRed Button Robotic COPsafetywomen
Advertisement
Next Article