#HongKongSixes2024 | இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார்.
ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹாங்காங் சிக்ஸர் என்பது கிரிக்கெட் அணியில் 11 பேருக்கு பதிலாக 6 பேர் கொண்ட அணியாக விளையாடுவர். இந்தத் தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 அணிகள் விளையாடவுள்ளன.
1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில் 2005 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வென்றிருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, கோஸ்வாமி, நதீம் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது, இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக செயல்படுகிறார்.
இதையும் படியுங்கள் : வசூலில் மிரட்டும் #Vettaiyan… 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
வரும் நவம்பர் 1ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணி அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. கடைசியாக நடந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.