Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் - சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!

05:11 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டை இருக்கிறது. மேலும் பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது.இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது.

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேலாக பதிவாகி வருகின்றது.  அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

இதையும் படியுங்கள் : “என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை கூறியதாவது :

’தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ம் தேதி வரை மாவட்டம் வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்க வேண்டும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த பொதுமக்களுக்கு மாவட்டம் தோறும் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்’

இவ்வாறு சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :
Department of HealthHeatPeoplesummerTamilNaduTNGovt
Advertisement
Next Article