ரத்து செய்யப்பட்ட உரிமம்...கார் ஓட்டிக் கொண்டே விசாரணைக்கு ஆஜரானவர்! எங்கே நடந்தது?
ரத்து செய்யப்பட்ட உரிமத்துடன் கார் ஓட்டியபடி, ஆன்லைன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிச்சிகனைச் சேர்ந்த கோரி ஹாரிஸ் என்ற நபர், முன் செய்த குற்றத்திற்காக காணொலி வாயிலாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார். ஹாரிஸின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர் கார் ஓட்டியபடி, விசாரணைக்கு ஆஜரானார். இதனை பார்த்த நீதிபதி, அவரை மாலை 6 மணிக்குள் சரணடையுமாறு உத்தரவிட்டார்.
தவறினால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் மே 15 அன்று நடந்ததுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீதிபதி அவரிடம் விசாரணை நடத்திய போது, "மிஸ்டர் ஹாரிஸ், நீங்கள் கார் ஓட்டுகிறீர்களா?" என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு ஹாரிஸ், "நான் எனது மருத்துவமனை செல்கிறேன். எனக்கு ஒரு நிமிடம் மட்டும் கொடுங்கள், நான் பார்க்கிங் செய்து கொள்கிறேன்” என்று ஹாரிஸ் கூறினார். அதற்கு நீதிபதி அவரிடம், "காரை நிறுத்திவிட்டீர்களா?" என்று கேட்க, அவர் ஆம் என்று பதிலளித்தார்.
ஹாரிசின் வழக்கறிஞர் நீதிபதியிடம், வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரினார். இதனையடுத்து நீதிபதி, “அவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லவா" என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர், ஆம் என்று பதிலளித்தார். அப்போது நீதிபதி, “அவரிடம் உரிமம் இல்லை. ஆனால் அவர் தான் கார் ஓட்டிக்கொண்டிருந்தார் ” என்று கூறுகிறார். அப்போது தான் ஹாரிஸ் தன் தவறை உணர்ந்தார.
தொடர்ந்து, நீதிபதி “அவர் ஏன் அவ்வாறு செய்வார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மாலை 6 மணிக்குள் சரணடைய வேண்டும். தவறினால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்" என்றார். இதனையடுத்து ஹாரிஸ் சரணடைந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்த நீதிமன்ற விசாரணை ஜூன் 5 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.