Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு!

12:13 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏரோனாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இன்று காலை 7.10 மணிக்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை (RLV LEX) சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், 3-வது முறை நடைபெற்ற சோதனையும் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.

 

இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து 'புஷ்பக்' ஏவுகணை விடுவிக்கப்பட்ட நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஓடுதளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. இந்த ஏவுகணையானது செயற்கைகோள் அல்லது விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமியில் தரையிறங்கக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article