'ரெட்ரோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு 'ரெட்ரோ' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 'ரெட்ரோ' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.