வெயிலுக்கு ரெஸ்ட்... தமிழகத்தில் இடியுடன் கூடிய கோடை மழை - எப்போது தெரியுமா?
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் நாட்களில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
07.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
08.04.2024: கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
09.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11.04.2024 மற்றும் 12.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் 10.04.2024 வரை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
07.04.2024: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
07.04.2024: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
08.04.2024 முதல் 10.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சக்கரிகை:
09.04.2024 மற்றும் 10.04.2024 - வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.