20 மாவட்ட மக்களே உஷார்... காலை 10 மணி வரை வெளுத்து வாங்க போகும் மழை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும ஏப்.7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!
அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
பெரம்பலூர்
லேசான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்:
ராணிப்பேட்டை
வேலூர்
சேலம்
திண்டுக்கல்
மதுரை
தேனி
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
புதுச்சேரி
காரைக்கால்