"வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது" - ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!
வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
மும்பையில் தனியார் வங்கிகள் இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கலந்து கொண்டார். மேலும், இந்த மாநாட்டில் துணை ஆளுநர்கள் மற்றும் ஒழுங்குமுறைத் துறை, கண்காணிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறையின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள் : அடுத்த 2மணி நேரத்தில் 10மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - 3மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
அப்போது பேசிய சக்தி காந்த தாஸ் கூறியதாவது :
"இந்திய வங்கித்துறை ஆபத்துகளும், சவால்களும் நிறைந்தது. வாடிக்கையாளர்களின் சுயவிவரங்கள் அடங்கிய கே.ஒய்.சி விவரங்களை சரி பார்க்காமல், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கக்கூடாது. வங்கி ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடாத வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகையை கவனமாக கட்டமைக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.